கிழக்கு மாகாணத்தில் 14வது மரணம் சம்பவித்துள்ளது. கல்முனைப்பிராயந்திலுள்ள சாய்ந்தமருதுப்பிரிவில் இம்மரணம் ஏற்பட்டுள்ளது. கல்முனைப்பிராந்தியத்தில் 7வது மரணம் இதுவாகும்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 2200ஜ தாண்டியுள்ளது.அங்கு நேற்றையதினம்(27)புதன்கிழமை 2285 ஆகியது.
அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1100ஜத் தாண்டி 1163ஆகியது.
கல்முனைப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்று பிரதானசந்தை மூலமாக ஏற்பட்ட உபகொத்தணிப்பரவலும்; 1100த்தாண்டியது. அந்த உப கொத்தணியில் இதுவரை 1125பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1163பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 573பேரும் திருமலை மாவட்டத்தில் 415 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 111பேருமாக 2262பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
14மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி ஆலையடிவேம்பு உகனை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 14 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கல்முனைப்பிராந்தியத்தில் 07பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் இருவருமாக இந்த 14 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது