வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை பிராந்திய பிரதம பொறியிலாளராக கடமையாற்றிய பொறியியலாளர் என்.டீ.எம் . சிராஜுடீன் தனது 26 வருட அரச சேவையிலிருந்து இம்மாத ஆரம்பத்தில் ஓய்வு பெற்றார். இவரின் சேவைநலன் பாராட்டும் நிகழ்வு இன்று (11) மதியம் கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தில் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொறியியலாளர் எம்.ஏ.எம்.எம். அனஸ், பிரதம இலிகிதர் ஏ.சி.எம். நிஸார், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவர் கடந்த காலங்களில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு என்பனவற்றில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அமைச்சு, பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய இவரின் காலத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன . இதில் வீதிகள், பாலங்கள் அபிவிருத்தி , நவீன மின் விளக்குகள் , வீதி சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்ட மரநடுகை திட்டங்களும் இவரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும் .
தனது ஓய்வு நிலையைக்கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய நிலையிலேயே ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்