சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உதவித் திட்டம் முன்னெடுப்பு

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  கரடிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை  சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

பின்தங்கி பிரதேச மாணவர்களின் நிலையினை அறிந்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் சமூகசேவகர் டி.எல்.சுதர்சன்  அவர்களது முயற்சியால் அவர்களது இரு பிள்ளைகளின் நிதி உதவி மூலம் இவ் உதவி வழங்கிவைக்கப்படது.

அதேவேளை  அக்கிராமத்தினைச் சேர்ந்த 55 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பிரதிச் செயலாளர் திருமதி செல்வி மனோகர் மற்றும் கரடிக்குளம் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேவேளை .இவ் உதவிகளைச் செய்த சுவீஸ் உதயம் அமைப்பினுடைய தலைவர் டி.எல்.சுதர்சன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கரடிக்குளம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் நன்றிகளைத்தெரிவித்துள்ளனர்.

 

Related posts