(க.விஜயரெத்தினம்)
உள்ளூராட்சி மன்றங்களில் சுகாதார கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான புதிய அரசாங்கம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களையும் உள்ளீர்க்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் கோரிக்கை முன்வைத்தார்.
கொரோனா, டெங்கு மற்றும் திண்மக்கழிவு அகற்றும் பணிகளில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த காலப்பகுதியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய சுகாதார துறை ஊழியர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் நிரந்தர நியமனமின்றி பல வருடங்களாக குறைந்த கொடுப்பணவின் கீழ் பணிபுரிகின்றனர்.இதானால் இவர்களின் குடும்பம் பல அசௌரியங்களுக்கு தினமும் முகம்கொடுத்துள்ளன.
இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க முடியாத நிலையில் ஆளணி மற்றும் நிதி ரீதியான பிரச்சினைகளை குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்குகின்றனர்.எனவே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களையும் உள்ளீர்க்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார்.