யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் திருக்கோவில் பிரதேச வறிய குடும்பஙங்களுக்கு நிவாரண பொதிகள் அன்பளிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நோய் தாக்கம் காரணமாக பணயத்தடைக் அமுலில் உள்ள நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் வாழும் தினக்கூலி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் இந்தக் கல்லூரி சமூகத்தினரால் ஒரு தொகுதி உலர் உணவப் பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 108 மிக வறுமை நிலையில் வாழும் தினக்கூலிக் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்திற்கு தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உலர் உணவுப் பொதிகளை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன்; மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் பொது சுகாதார மருத்து தாதிய சகோதரி திருமதி யு.சக்கியா மற்றும்; மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர் பொது சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.