துறைநீலாவணைக்கு வீதியில் குப்பைகள் வீசுவதும்,வேண்டத்தகாத செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது.
துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியோரத்தில் வீட்டுக்கழிவுகள்,கடைக்கழிவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியோரத்தில் அடையாளம் தெரியாத நபர்களாலும்,சில ஆட்டோக்காரர்களாலும் காலை நேரத்திலும்,இரவுவேளையிலும் குப்பைகளையும்,வீட்டுக்கழிவுகளை
இதனால் துறைநீலாவணைக்கு செல்லும் வீதியோரம் மோசமான நிலையில் காணப்படுவதாகவும்,பழுதடைந்த கோழிக்கழிவுகளை தெருநாய்கள்,காகங்கள் எடுத்துச் செல்வதால் வீதியில் பயணிக்கும் பொதுமக்களையும்,மாணவர்களையும்அசௌரியங்களுக்குள்ளாக்கப்படுவதா
இதேவேளை துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பாதையில் சிலர் வேண்டத்தகாத செயற்பாடுகளிலும்,போதைப்பொருள் பாவனையிலும், போக்குவரத்துக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள்.இதனால் பெண்கள்,சிறுவர்கள் அச்சமடைவதாகவும் கவலை தெரிவிக்கின்றார்கள்.
இவ்விடத்திலிருந்து 100 மீற்றருக்கு அண்மையில் விஷேட அதிரடிப்படையினர் முகாம் இருந்தும் படையினரை பொருட்படுத்தாது வீசிவிட்டு செல்கின்றார்கள்.இவ்விடயமாக பலதடவைகள் கல்முனை மாநகரசபை சபை முதல்வருக்கும்,களுதாவளை பிரதேச சபை தவிசாளர்,செயலாளர்,மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளருக்கும் பலதடவை எடுத்துக்கூறி அவர்களினால் அதிரடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே மருதமுனை,பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள மதப்பெரியார்கள்,பொது அமைப்புக்களின் பிரநிதிகள் உறுதியான நடவடிக்கையை எடுத்து துறைநீலாவணை கிராமத்திற்கான வீதியோரத்தில் வீட்டுக்கழிவுகளையும்,கோழிக்கழி