மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரிப்பு

பயணத்தடை நீக்கப்பட்டுள்ளபோதிலும் கொரனா தொற்று அதிகளவில் காணப்படும் பகுதிகளில் பல்வேறு சுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுவருவதுடன் அதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த சில தினங்களாக அதிகரித்துவரும் கொரனா தொற்று காரணமாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படும் நிலை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பேணாதவர்களை கண்டறியும் வகையிலான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார்.சுகாதாரதுறையினை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அறிவுறுத்தல்களை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

Related posts