இலவச சுகாதார சேவையின் பிரதிபலனை இலங்கை மக்களுக்கு வழங்கும் குறிக்கோளை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றம் என்பவற்றின் நிதி ஒதுக்ககீட்டின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்னா அவர்களால் 17/06/2018 இன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம்,பிரதியமைச்சர் அலிஷாகிர் மௌலானா ,மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்ராலெப்பை ,வைத்தியசாலை ஆளணியினர் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அவுஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு நிதிவளங்குணர்கள் இக்கட்டட மற்றும் உபகரணங்களுக்கான நிதி மூலங்களை வழங்கினர்.