மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 காலை தொடக்கம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதனால் 60வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் கோரியுள்ளது.இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் வேகமாக தொற்றிவரும் கொவிட் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 காலை 8.00மணி தொடக்கம் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து 60வயதுக்கும் மேற்பட்டவர்களை தங்களது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினை தொடர்புகொண்டு தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.