திங்கள் முதல் கல்முனைப்பிராந்தியத்திற்கு தடுப்பூசிகள்!கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தௌபீக்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி வழங்கப்படாமலிருந்துவந்த கல்முனைப்பிராந்தியத்திற்கான முதலாவதுதொகுதி கொரோனாத் தடுப்பூசிகள் நாளை வந்துசேரவிருக்கின்றன. பெரும்பாலும் திங்கட்கிழமை(12) முதல் அவை செலுத்தப்படவிருக்கின்றன.
 
இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கில் கல்முனைப்பிராந்தியத்திற்க இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லையே எப்போது வழங்கப்படும் என்று கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
அங்கு 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.
 
அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்குமாகாணமெங்கும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன.
 
வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலைய ங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்படவிருக்கின்றன. அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் கிராமசேவையாளருடுன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிபப்டுத்திக்கொள்ளலாம்.

Related posts