கோமாரி மணல்சேனை விவசாயிகளுக்கு சேதனப் பசளை தொடர்பாக விழிப்பூட்டல்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு நஞ்சற்ற விவசாய உற்பத்தினை மேற்கொள்ளும் வகையில் நாடுபூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மணல்சேனைப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு சேதனப் பசளை மற்றும் இயற்கை பீடநாசினிகளை தொடர்பான நன்மைகள் மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பாக செய்கை முறையிலான விழிப்பூட்டல் நிகழ்வு கோமாரி மணல்சேனை கிராமத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.
விவசாயிகளுக்கு சேதனப் பசளை மற்றும் இயற்கை பீடைநாசினிகள் பாவனை ஊடாக சூழல் நேயமிக்க விவசாயத்தினை மேற்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் கருப்பொருளுக்கு அமைவாக கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ் விழிப்பூட்டல் நிகழ்வானது போதனாசிரியர் பி.கேதீஸ்வரன் மற்றும் கோமாரி பிரதேச தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.தனுஜன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்று இருந்ததுடன்
நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் லாகுகல வலயத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் விவசாய போதனாசிரியர் தலைமைப் பீடம் திருமதி தர்சினி ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்