முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு பின்னர், எரிகாயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் நேற்று (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வளத்தாப்பிட்டி பாரதி இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வளத்தாப்பிட்டி பொதுமக்கள் ஆலய நிர்வாகிகள் இளைஞர்கள் பங்களிப்போடு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாளராக அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு நீதி கோரி மேற்படி போராட்டம் நடாத்தப்பட்டதாக வளத்தாப்பிட்டி பாரதி இளையோர் ஒன்றிய தலைவர் எஸ்.சுபராஜ் தெரிவித்தார்.
சகோதரி ஹிசாலிக்கான மரணத்திற்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம், வளத்தாப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி, பிள்ளையார் கோவில் வீதியூடாக ஆர்ப்பாட்டம் நகர்ந்து வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் இருந்து பொது அமைப்பு தலைவர்களின் கருத்துக்களோடு நிறைவடைந்து