இறுதிநாள் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணியில்..300பேருக்கு ஏற்றியதாக எம்.ஓ.எச் தஸ்லிமா கூறுகிறார்.

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரிப்பிரிவில் நேற்று(2) மூன்றாவது நாளாகவும்  நடமாடும் சேவையூடான தடுப்பூசி செலுத்தும்பணி முன்னெடுக்கப்பட்டது.
 

காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான பிரதம பொதுச்சுகாதாரப்பரிசோதனர் சா.வேல்முருகு உள்ளிட்ட சுகாதாரசேவைக் குழுவினர் வீடுவீடாகச் சென்று தடுப்பூசிகளை செலுத்திவருகின்றனர்.

தடுப்பூசி  ஏற்றும் மையங்களுக்கு வரமுடியாதவர்கள் சுகவீனமுற்றவர்கள் மாற்றுத்திறாளிகள் வயோதிபர்கள் சுயநினைவற்றவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு கடந்த மூன்று நாட்களில் நடமாடும் சேவையூடாக வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

மொத்தமாக  80வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.

காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் கூறுகையில்:
நாம் இதுவரை காரைதீவில் சுமார் 8ஆயிரம் வக்சீன்களை செலுத்தியுள்ளோம். இது எமது இலக்குதொகையில் 80வீதமாகும்.எனவே வரமுடியாதவர்களுக்காக நடமாடும்சேவையை ஆரம்பித்தோம்.சுமார் 300பேருக்கு நடமாடும்சேவையூடாக தடுப்பூசி செலுத்தமுடிந்தது.அதனையறிந்து எமது பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள் எம்முடன் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தியமை மகிழ்ச்சியாகவுள்ளது.எமது குழுவினருக்கும் புதுதெம்பை ஊட்டியுள்ளது. நாம் இன்னமும் உற்சாகமாக பணியாற்றவுள்ளோம்.

அதேவேளை எமது பணிமனையிலும் தடுப்பூசிஏற்றும் பணி காலை 7.30மணிமுதல் மாலை 5மணிவரை இடம்பெற்றது. என்றார்.

Related posts