மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டுவருவதாக சுகாதார பிரிவினர் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலமையில் மக்களின் நடமாட்டங்கள் நகர்பகுதியில் கடந்த இருநாள்களும் அதிகரித்து காணப்பட்டமை தொடர்பாக மாவட்ட கொரோனா செயலணியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது உடணடியாக பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கான தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அனாவசியமான நடமாட்டங்கள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகமாக ஏற்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவேதான் அதிகமானோர் வெளியில் அலைவதை கானக்கூடியதாகவுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை காட்டிக்கொண் அதிகமானோர் வெளியிடங்களில் சுற்றித்திரிவது தொடர்பாக பொலிஸா முறையிட்டுள்ளனர் இதனை தடுப்பதற்காக சகல திணைக்கள தலைவர்களும் தங்களின் ஊழியர்களை வேலைக்கு அழைக்கப்படுவது தொடர்பான உறுதிப்பட்ட கடிதத்துடன்தான் வெளியில் வரமுடியும் என தற்போது மாவட்ட கொரோனா செயலணியின் தீர்மாணம் ஒன்றை எடுத்துள்ளது.
இன்றை நிலவரப்படி மக்களின் நடமாட்டம் சற்று குறைந்துள்ளது அவதாணிக்கப்படுகின்றது இதுதொடர்பான சில படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.