மட்டக்களப்பு மாவட்டத்தில் முடக்க நிலை காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான 64482 குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இன்று வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ் உதவித் தொகை பிரதேச செயலாளர்களின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் இடம்பெற்றபோது பயனாளிகளுக்கு 2000 ரூபாவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிவைத்தார்.
மண்முனை வடக்கு வடக்கு பிரதேச செயலகப் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் 2ம் கட்ட சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 1500 பயனாளிகளுக்கு இக் கொடுப்பணவுத் தொகை இன்று வீடு வீடாகச் சென்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டது.
இப்பகுதியிலுள்ள பனிச்சையடி,பாலமீன்மடு, கொக்குவில்,திராய்மடு, கருவேப்பங்கேணி ஆகிய 5 கிராமங்களிலுள்ளவர்களுக்கு கட்டம் கட்டமாக இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
அரசாங்கத்தினால் முதல்கட்டமா 19.5 மில்லியன. ரூபா முதலக்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.முடக்க நிலையில் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டு 2ம் கட்ட சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கே இவ் உதவித் தொகை வழங்கப்பட்டது.