நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு 2000ருபா வீதம் நிவாரணமாக வழங்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கு 70மில்லியன் ருபா கிடைக்கப்பெற்றுள்ளது.
காரைதீவுப்பிரதேசத்தில் இந்த 2000ருபா கொடுப்பனவைப்பெற 1096பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்று காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.
அவர்களுக்கான கொடுப்பனவு நேற்று(25)புதன்கிமை காரைதீவு 1 கிராமசேவையாளர் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அக்கொடுப்பனவை வழங்கிவைத்தார். 1ஆம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர் செல்லத்துரை கஜேந்திரனும் உடனிருந்தார்.
முதலில் கிராமசேவை உத்தியோகத்தா அலுவலகத்திலும் பின்னர் வீடுவீடாகச் சென்றும் அக் கொடுப்பனவினைக் கையளித்தனர்.
அரச உதவி எதனையும் பெறாத குறைந்த வருமானம் பெறும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
அரச உத்தியோகதரை கொண்ட குடும்பம்,ஓய்வூதியம் பெறும் குடும்பம்,சமுர்த்தி உதவி பெறும் குடும்பம்,
முதியோர் கொடுப்பனவு பெறும் குடும்பம்1,00 வயதுக் கொடுப்பனவு பெறும் குடும்பம்,அங்கயீன உதவி பெறும் குடும்பம் போன்ற அரச உதவியைப் பெறும் குடும்பங்கள் இவ்வுதவித் தொகையைப் பெறத் தகுதியற்றவர்கள். இவர்களுக்க இது வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.