திருக்கோவில் பிரதேசத்தில் 400குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா அரசின் உதவிப் பணம் தொகை வழங்கி வைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் 400குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா அரசின் உதவிப் பணம் தொகை வழங்கி வைப்பு
 
அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் உதவிப் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
 
இவ் உதவிப் பணத் தொகையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் ஆலோசனைக்கு அமைவாக  கிராம மட்ட கள உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று அரசின் பயணத்தடை கால உதவித் தொகை பணத்தினை இன்று (26) வழங்கி வைத்திருந்தனர்.
 
அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் அரசின் சுற்று நிருபத்திற்கு அமைவாக அரசிடமிருந்து எந்தவொரு மாதாந்த உதவிப் பணமும் பெற்றுக் கொள்ளாத சுமார் 780 வறிய குடும்பங்களில் முதல் கட்டமாக 400 குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா உதவிப் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
 
இவ் உதவிப் பணத்தினை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் வீடு விடாச் சென்று அரசின் பயணத்டைக் கால உதவித் தொகை பணத்தினை வழங்கி வைத்திருந்தனர்.

Related posts