எருவில் கிராமத்தினை சேர்ந்த சட்டத்தரணி திரு .இ சோமசுந்தரம் sir அவர்களின் மறைவு குறித்து மிகுந்த வேதனை அடைவதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி அவரின் பிரிவுத்துயரால் தத்தளித்து கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரி வித்துக்கொள்ளுகின்றேன்.
என எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ( எஸ்டா ) அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமூகசேவையாளரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான அ.வசிகரன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளவை வருமாறு
மட் /பட் / எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் க .பொ .த (சா /த ) தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக முதன்முறையாக உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அவ்வகுப்பில் கல்வி 1997 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன் .பாடசாலையில் கல்வி பயின்ற காலத்தில் ஆங்கில பாட ஆசானாக மட்டுமன்றி எமக்கு அறம் ,ஒழுக்கம் சார்ந்த கல்வியையும் வழங்கியவராக விளங்கினார் . இனப்பற்று , மொழிப்பற்று இவரிடம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் இவர் மீதான பற்றுதல் என்னுள் குடிகொண்டது .1947 பாராளுமன்ற ஆட்சி இலங்கைக்கு அறிமுகமான காலம் தொடக்கம் எமது கிராமத்தை சேர்ந்த பலரும் மொழி பற்று மிக்கவர்களாகவே விளங்கினர் .1949 இல் தந்தை செல்வாவினால் தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட வேளையிலும் அதனை ஆதரித்து தமது வீட்டில் கொடி கட்டி தீவிர பிரச்சாரம் செய்த அன்பர்களும் இருந்தனர் . அதன் வழியாக தமது இளமை காலம் தொடக்கம் தமிழரசு கட்சிக்கு ஆதரவு செலுத்திய ஒருவராக சோமசுந்தரம் sir அவர்களை குறிப்பிடலாம் . தொடர்ச்சியான கட்சி சார்ந்த செயற்பாடுகள் காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பளராக களமிறங்கினார். அவர் மீது கொண்ட பற்றுதல் காரணமாக அத்தேர்தல் பிரச்சாரத்தில் அவருடன் களமிறங்கி கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாட்களும் அவர் ஒரு கட்டத்தில் என்னை பிரச்சார பீரங்கி என அழைத்தமையும் பசுமையான நிகழ்வு .அன்று தொடக்கம் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் தமிழர் நலன் சார்ந்து செயற்படும் தமிழரசு கட்சிக்கே எனது ஆதரவும் பங்களிப்பும் குடும்பம் ,உறவு , கிராமம், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தொடர்ந்த வண்ணம் உள்ளது இந்த பற்றுதலை என்னுள் விதைத்தவர் சோமசுந்தரம் sir அவர்கள் . பலர் தமிழ் தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற இந்த வேளையில் பல ஆண்டுகள் தமிழரசு கட்சிக்கு தன்னால் இயன்ற பணிகளை செய்து கொண்டு வாழ்ந்த sir அவர்களின் இழப்பு வேதனையை தருகின்றது .அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் அவருடன் பயணித்தவன் என்ற வகையில் நன்றி