ஜெனிவா அமர்வு இலங்கை தமிழ் மக்கள் விடயத்தில் நல்லெண்ணத்தினை ஏற்படுத்தும்
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திகுமார் நம்பிக்கை
ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு இலங்கை தமிழர் விடயத்தில் சிறந்த தீர்வினை ஏற்படுத்தும் அதற்கான முயற்சியில் சர்வதேசம் ஈடுபடுகின்றமை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிக்கையில் இலங்கை தமிழர் விடயத்தில் சர்வ தேசத்தின் பார்வை மேலோங்கிக் காணப்படும் சந்தர்ப்பத்தில் வடகிழக்கிலுள்ள ஒரு சில அரசியல் வாதிகள் தாம் தீர்வு விடயத்தில் முழுமையான பாத்திரமேற்பது போன்று நாடகங்களை அரகேற்ற நினைப்பது அரசியல் இருப்பினை தக்கவைப்பதற்கான வியூகமாக அமைந்துள்ளது.
வடகிழக்கு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்த சுமார் 40 க்கு மேற்பட்ட கிராமங்கள் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதனை மறந்து கபட நாடகங்களை அரகேற்ற நினைக்கும் அரசியல் வாதிகள் தாம் அரசிலுக்குள் எவ்வாறு வந்தனர் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் நேசிக்கின்ற மக்கள் பிரதி நிதிகள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் விடயத்தில் முடியுமான வரை கூடிய கரிசனை காட்ட வேண்டும் மாறாக மாற்று இனத்தவரின் மாயைக்குள் தம்மை கொண்டு செல்ல முடியாது. மாற்று இனத்தவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு அவர்களின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என்பதனை தமிழ்ப் பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் எத்தனையோ பிரச்சினைகள் செறிந்து காணப்படும் நிலையில் அதனை விடுத்து கட்சிக் குடும்பத்தினுள் தகராது ஏற்படுத்துவதனை அரசியல் வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் மக்கள் அதற்கான பாடத்தினை எதிர்வரும் காலங்களில் புகட்டுவார்கள் எனத்தெரிவித்தார்.