அண்மையில் இடம்பெற்ற பட்டதாரி பயிலுனர் நேர்முகப் பரீட்சைக்கு பட்டதாரிகளின் வயதெல்லை 35 ஆக மட்டுப் படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குமாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றை கேட்டுக் கொண்டார்.
35 எனும் வயதெல்லை தேசிய கொள்கையாக இருந்தாலும் இப்போதிருக்கின்ற 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதற்காக தற்காலிகமாகவேனும் வயதெல்லையை 45 ஆக அதிகரித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறும், வடக்கு கிழக்கில் 2012 ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் கூட இன்னும் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நேர்முகப்பரீட்சை மூலம் உள்வாங்கப்படும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.