மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் அருவி பெண்கள் வலையமைப்பினரால் பாரிய சிரமதானப்பணி இடம்பெற்றது.
எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலயம் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம், மற்றும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை(9)காலை பாடசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன .
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி ,சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் சமூகத்தின் நலன் கருதி இன்றையதினம் மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வளாகம் ,மலசலகூடம் மற்றும் வகுப்பறைகள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனனுடன்அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள்,2ம் கட்ட தலைமுறையினர், பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என்பவர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகளை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன