1மில்லியன் செலவில் 500குடும்பங்களுக்கான நிவாரப்பணி ஆரம்பம்!நேற்று மண்டானை கஞ்சிகுடிச்சாறு மக்களுக்கு வழங்கிவைப்பு

கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த  ஒருதொகுதி அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று(8)வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
 

கனடா நாட்டிலுள்ள ‘ ரு டீப் ‘ நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.

நேற்று திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய கிராம மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிபிரதேசசெயலாளர் க.சதிசேகரன் தவிசாளர் கி.ஜெயசிறில் நிவாரணப்பணி ஒருங்கிணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
இப்பணிகள் அந்தந்த பிரதேச செயலக அனுமதியுடன் முறைப்படி உரிய அதிகாரிகளைக்கொண்டு கடந்த காலங்களில் இடம்பெற்றதைப்போன்று நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts