கொரோனா நோயானது அறிகுறிகளுடன் அல்லது அறிகுறிகள் இல்லாமல் வந்து போகலாம். அதன் பின் சில நாட்களிலிருந்து கிழமைகளில் MIS-C யானது 21 வயதுக்குட்பட்டவர்களின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது.இதற்கான உறுதியான காரணிகள் இன்னும் கண்டறியப்படவில்லை.பெற்றார்கள் கவனமாயிருக்கவேண்டும்.
என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்ஃபோதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான வைத்தியகலாநிதி வைத்தியர் .விஜி திருக்குமார் தெரிவித்தார்.
சமகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அதேவேளை பெற்றோர்கள் அதிக விசேட கவனம் செலுத்தவேண்டிய இப்புதுவகை நோய்பற்றி வைத்தியநிபுணரிடன் கேட்டபோது அவர் கூறியவை அது.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இப்புதுவகை ‘மிஸ்’ – சி என்ற ஆபத்தான நோயை MIS – C – Multisystem Inflammatory Syndrome என்று அழைப்பர்.
‘மிஸ்’ – சி MIS-C என்பது சிறுவர்களில் பெரும்பாலான அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துதலாகும்.பொதுவாக
இதயம் , நுரையிரல்,மூளை,சிறுநீரகம்,கண், தோல்,உணவு சமிபாட்டுத் தொகுதி போன்ற பல தொகுதிகளை ஒன்றினைந்ததாக இப் பாதிப்பு காணப்படுகிறது.
இத் தொற்றானது தீவிரத் தன்மையுடையது இ உயிர் ஆபாத்துக்களை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுதலால் உரிய வேளையில் காலதாமதம் இன்றி விசேட வைத்திய நிபுணர்களை அணுகி சிகிச்சைகளை பெறுதல் கண்டிப்பானது.
இந் நோயின் அறிகுறிகளாக மேற்குறிப்பிட்டவர்களில் காய்சலுடன் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு,
வாந்திமயக்கம்/தலைச்சுத்து ,குருதி அமுக்கம் குறைதல்,கண்ணினுள் இரத்த கசிவு காணப்படல்,தோலில் வேறுபட்ட தழும்புகள் (RASH) காணப்படலாம்.இதயத்தில் இதய குருதிகுழாய்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் திடீர் மரணங்கள் ஏற்படலாம் போன்ற அறிகுறிகளை அவதானிக்கலாம்.
இருப்பினும் எல்லா பிள்ளைகளிலும் எல்லா அறிகுறிகளும் தென்படாது.
இவற்றின் தாக்கம் தீவிரமாக உள்ள சிறுவர்களில்
மூச்சு விடுதலில் சிரமபடுவார்கள்.கடுமையான நெஞ்சு வலி/நோ நீண்ட நேரம் காணப்படும்.தடுமாற்றம்.இயல்பாக இருக்க முடியாது இருத்தல்.உதடு விரல்களின் நிறம் நீலமாக மாறுதல்.போன்ற நிலமைகளை அவதானிக்க கூடியதாக இருக்கும்.
இவர்கள் உடனடியாக அரச வைத்தியசாலைகளுக்கு சென்று விசேட வைத்திய நிபுணர்களை அணுகின்ற போது தேவையான குருதி பரிசோதனைகள்,மார்பு X-கதிர்,வயிறு ,இதயம் ஸ்கேன் போன்றவை முன்னேடுக்கப்படுவதுடன் சிகிச்சைகளையும் வழங்குவார்கள்.