சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் ஊடாக போரதீவுப்பற்று பிரதேசசெயலகப் பரிவுக்குட்பட்ட திக்கோடை 39 ஆம் கிராமம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உடுதுணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு; திங்கட்கிழமை 18 ஆம் திகதி சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் உடுதுணி வழங்கிவைக்கும் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருவருட்செல்வன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அமைப்பின் அங்கத்தவர்களான ஆசிரியர். சா.நடனசபேசன், ஆசிரியர் இ.ஜீவராஜ்,கண்ணன் அத்தோடு அப்பாடசலையின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இவ் உடுதுணிகளை வழங்கிவைத்ததுடன் இந் நிகழ்வினை ஆசிரியர் ரி.தயாளன் தொகுத்து வழங்கினார்.
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் உதவிச் செயலாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்களான ரமேஸ்இவின்சன் ஆகியோர்களின் முயற்சியினாலும் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் பொருளாளர் க.துரைநாயகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இவ் உடுதுணிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.