பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு கையேடு வழங்கிவைப்பு


எஸ்.சபேசன்

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் (எஸ்டா ); பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் க .பொ .த (உ ஃத ) பரீட்சையில் வரலாறு பாடத்துக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமூகசேவகருமான அ.வசிகரன் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் உதவிக்கல்விப்பணிப்பாளர் சுரேஸ் தலைமையில் வழங்கிவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.
அ.வசிகரன் அவர்களின் முயற்சியினால் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம் (எஸ்டா ) உருவாக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதாரம் போன்ற வளர்ச்சிக்காக பல இலட்சம் ரூபா பணம் செலவுசெய்யப்பட்டு இருப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியான சேவையினை இவ் அமைப்பு செய்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பட்டிருப்பு வலயத்தில் 40000 ரூபா நிதி பங்களிப்பில் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது
.இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாக பிரிவுக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ் .மகேந்திரகுமார் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமூகசேவகருமான அ.வசிகரன் ,அமைப்பின் செயலாளர் இ.ஜீவராஜ் மற்றும்இபட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய வள நிலைய முகாமையாளர் இசமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆசிரிய ஆலோசகர்கள் இஎஸ்டா அமைப்பின் ஆலோசகர்கள் உறுப்பினர்கள் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் வரலாறு பாட ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர் .

Related posts