(சா.நடனசபேசன்)
அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 15 ஆம் கிராமத்தினை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வதிவிடமாகவும் கொண்ட சாமித்தம்பி மோகன் அவர்கள் சம்மாந்துறை கல்வி வலயத்தில் விவசாயப்பாட ஆசிரிய ஆலோசகராக அண்மையில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தரம் 1 ஆசிரியராக இருப்பதுடன் தனது ஆரம்பக்கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கற்றதுடன் இடைநிலை மற்றும் உயர்கல்வியினை மட்டக்களப்பு மெதடிஸ்தன் மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் கற்றவர் .
1992 ஆம் ஆண்டு விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான ஆசிரியராக முதல் நியமனம் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்திலும் பின்னர் 4 ஆம் கிராமம் வாணிவித்தியாலயத்திலும் ,அல்ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் கற்பித்ததோடு இறுதியாக ராணமடு இந்துக்கல்லூரியிலும் கடமையாற்றிய நிலையில் ஆசிரிய ஆலோசகராக நியமனம்பெற்றுள்ளார். இவர் கல்விமாணிப் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.