Jayarushanth: ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருப்பதை அறிந்து விஞ்ஞான உலகம் வியக்கிறது. துல்லியமான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் என அதிசயிக்கிறது.
மேலும், சர்வதேச ஆன்மீக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சிக்குப்பின் பூமியின் காந்த மையப்புள்ளி சிதம்பர நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாக கண்டுபிடித்திருப்பது தான் உச்சக்கட்ட ஆச்சரியம் என்கிறார்கள்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற புகழான சைவ சமய புலவர்களால் தேவார பாடலில் பாடப்பட்ட தில்லையம்பலத்து திருத்தலம் கட்டப்பட்டது.
1000- 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என ஆய்வுகள் கூறினாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் பாடிய திருமந்திரத்திலேயே இக்கோயில் இடம்பெற்றுள்ளது. பழங்காலத்திலிருந்தே திருமூலர், பதஞ்சலி முனிவர், வியாக்கியபாதர் போன்ற முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.
நம் அறிவுக்கு எட்டியதும் எட்டாததுமாக அறிவியல் பூர்வமான பல உண்மைகள் விஞ்ஞானத்தோடு மட்டுமல்லாமல் மனித உடற்கூறுகளோடும் சம்பந்தப்பட்டுள்ளது.
அணுத்துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்பதை நடனமாடும் நடராஜர் சிலை மூலம் உணர்த்தி, அதை காந்த சக்தியின் மையத்தில் வைத்து கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது வாசல், மனித உடலில் ஒன்பது துளைகள் இருப்பதை குறிக்கிறது.
கோயில் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் ஒரு நாளைக்கான சராசரி சுவாசம் 21,600 தடவையாகும். அந்த தகடுகளைப் பொறுத்த 72 ஆயிரம் தங்க ஆணிகள், அது மனித உடலில் உள்ள மொத்த நாடிகளின் எண்ணிக்கையாம்.
நடராஜரின் தாண்டவம் ’காஸ்மிக் டான்ஸ்’ என்றும் வெளிநாட்டு அறிஞர்களால் இப்போது ஒப்புமைப்படுத்தப்படுகிறது. நம் உடலில் இதயம் இடப்பக்கமே இருப்பதால் பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கனகசபைக்கு வழி பிற கோயில்களில் இருப்பது போல நேராக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இதன் நான்கு தூண்கள் நான்கு வேதங்களையும்.
பொன்னம்பலத்தில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும் குறிக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள (64 64) மேற்பலகைகள் 64 கலைகளை குறிக்கிறது. பொற்கூரையில் இருக்கும் 9 வகையான கலசங்கள் உடலில் உள்ள 9 வகையான சக்தியை குறிக்கிறது.
அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும் அதன் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றன.
சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம் அதன் ரகசியம்தான். இக்கோயிலின் சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாயில் உள்ளது. அதன் திரைவிலக்கி உள்ளே கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது.
ஆனால், அங்கே எந்த சிலையும் இருக்காது. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று மட்டும் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் இதன் ரகசியம் ஆண்டவன் ஆகாய வளியாக இருப்பதை அங்கு உணர்த்துகிறார்கள். அதுதான் சிதம்பர ரகசியம்.
விஞ்ஞான நுட்பங்கள் கூட போட்டிபோட முடியாத சிறப்புகளை நம் முன்னோர்கள் தங்கள் மெய்ஞான அறிவால் உருவாக்கியிருப்பதற்கு சாட்சியே தில்லை நடராஜர் கோயில்.