13தங்கப்பதக்கங்களை சுவீகரித்த சாதனை மாணவியை வீடுதேடி சென்று வாழ்த்தியசாணக்கியன் எம்.பி. கலையரசன் எம்.பி. தவிசாளர் ஜெயசிறில்

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 13தங்கப்பதக்கங்களை  சுவீகரித்து சிறந்தமருத்துவபீட மாணவியாக(First class – Topper) தெரிவுசெய்யப்பட்ட    கிழக்குமாகாணத்தின் முதல் சாதனை மாணவி தணிகாசலம் தர்ஷிகாவை,  த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சாணக்கியன்m த.  கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேசசபைத்  தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் அக்கரைப்பற்று வீடுதேடிச் சென்று   வாழ்த்தினர் .
 
நேற்று(26) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1மணியளவில் வீட்டுக்குச்சென்ற இவர்கள் மாணவியை பாராட்டியதோடு பொன்னாடை போர்த்தி மாலைசூடி மனமார வாழ்த்தினர். குடும்பத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
 
இக்குழுவினருடன் இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபமுன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் அமைப்பாளர் ரி.பிரதீபன் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட பலர் கலந்துகொண்டு மாணவியை வாழ்த்தினர்.
 
அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின்MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
 
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
  கடந்த MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற ( First Class ) ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் அவர்களின் புதல்வி தர்சிக்கா அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது.
 
அத்தோடு குறித்த Batchஇன் முதல்நிலை (Topper) ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts