சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் விஷேட நிருவாகசபைக் கூட்டம் தாய்ச்சங்கத்தின் தலைவர் செயலாளர் நிருவாக உறுப்பினர்களின் ; வேண்டுகோளுக்கு இணங்க 21.01.2022 வெள்ளிக்கிழமை மாலை போரதீவு எரிபொருள் நிரப்புநிலைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் அலுவலகத்தில் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் இலங்கைக்கான இணைப்பாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் சுவிஸ் நாட்டில் இருந்து செயலித்தொழில்நுட்பத்தின் ஊடாக கூட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது புதியநிருவாகசபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது தலைவராக ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன்,செயலாளராக திருமதி றொமிலா செங்கமலன் பொருளாளராக பாவாணர் அக்கரைப்பாக்கியன் பிரதித் தலைவராக ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் பிரதிச் செயலாளராக ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் பிரதிப் பொருளாளராக ம.ஹருஸ்ராஜ் உறுப்பினர்களாக வர்த்தகர் அகிலன் ஆசிரியர் இ.ஜீவராஜ் க.யுதர்சன் எஸ். கருணாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதத்தினை தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் இலங்கைக்கான இணைப்பாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களாலும் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவர்களாலும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.