1400கிலோ எடையுள்ள மாபெரும் காளிஅம்பாள் விக்ரகம் குமுக்கனில் பிரதிஸ்டை

1400கிலோ எடையுள்ள மாபெரும் காளிஅம்பாள் விக்ரகமொன்று கிழக்கின் தென்எல்லையிலுள்ள குமுக்கன் ஆற்றுப்படுக்கையிலுள்ள குமுக்கன் மடத்தடி அம்மன்ஆலய வளாகத்தில் பிரதிஸ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
 
வன அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பில் அவர்களின் நேரடி வழிகாட்டலில் குமண சரணாலயத்தில் மாபெரும் சக்தி பீடமாக விளங்குகின்ற குமுக்கன் ஆற்றங்கரையின் மடத்தடி அம்மன் ஆலயத்தில் மாபெரும் காளி தேவியின் விக்ரக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 
சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதானி சிவசங்கர் ஜீ இதனை முன்னின்று செயற்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்தார்.
 
உதவியாக  இலங்கையின் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் துணைத்தலைவர் மனோகரன் சிவயோகி மகேஸ்வரன் ஸ்வாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் செயற்பட்டனர்.
 
சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதானி சிவசங்கர் ஜீ கருத்துரைக்கையில்:
 
விக்ரமாதித்தன் பூஜித்த உச்சயினி பிரதேசத்தில் இருந்து கல்லை தெரிவு செய்து அதை சாமுத்ரிகா லட்சணங்களுடனும் 1400கிலோ எடையுள்ள மாபெரும் மஹா காளியாக வடிவமைத்து உயிர் கொடுத்த என் அன்புக்குரிய உலகம் அறிந்த மயன் வம்சத்தில் வந்த சிற்ப ஆச்சரியார் கலைமாமணி முத்தையா ஸ்தபதி அவர்களுக்கு நன்றிகள். உலகம் உள்ளவரை அவர் உருவாக்கிய இந்த அபூர்வ படைப்பு அவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
                      அன்னை வாலைத்தாயின் பேரருளால் அனைத்து வித சிரமங்கள் இடர்களை தாண்டி பிரதிஷ்டை நடைபெற்றது. மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மற்றும் வன பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Related posts