முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்புச் செயலாளரும், சி.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர், குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அவரது கைது விடயத்தில் இலங்கை அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஒளிபரப்பு கண்காட்சியொன்றில் பங்குபற்றுவதற்காக சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த ரொஹான் வெலிவிட்ட, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.