பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபராக அதிபர் தரத்தினைச் சேர்ந்த சோமசுந்தரம் செல்வம் புதன்கிழமை 30 ஆம் திகதி கடமையினைப் பொறுப்பேற்றுகொண்டார்.
இவர் குறுமன்வெளியினைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையினை வதிவிடமாகவும் கொண்டதுடன் தனது ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியினை குறுமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினை பட்டிருப்புத் தேசிய பாடசாலையிலும் கற்று மட்டக்களப்பு தேசியகல்விக்கல்லூரியில் தமிழ்ப் பாட ஆசிரியராக பயிற்சிபெற்று 2003 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டத்தில் பிபில தமிழ் கனிஷ்டவித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம்பெற்று பின்னர் அப்படசாலையில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்
அதன் பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் தமிழ்பாட ஆசிரியராகவும் பின்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று அப்பாடசாலையில் பிரதிஅதிபராக கடமையாற்றிய நிலையில் துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, கலைமாணி,பட்டப்பின் கல்விடிப்ளோமா, கலைமுதுமாணி கல்விமுதுமாணி,வழிகாட்டல் ஆலோசனை டிப்ளோமா ஆகியபட்டங்களைப் பெற்று இருப்பதுடன் அகிலஇலங்கை சமாதானநீதவானாகவும் அதேவேளை 2016 இல் இந்தியாவில் நடைபெற்ற அகில உலக தமிழ் உரைநடை மாநாட்டில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்து அதற்கான பட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது