திருக்கோவிலில் தேசிய உளவளத்துறை தின நிகழ்வு

தேசிய உளவளத்துறை தின நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
 
திருக்கோவில் பிரதேச செயலாளர்  த.கஜேந்திரனின் ஆலோசனைக்கமைய,  பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர்  க.சதிசேகரன் தலைமையில் நடைபெற்றது.
   வரவேற்புரையை சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்  யு.எல்.எம். அஜ்வத் நிகழ்த்தினார்.  
 
தலைமை உரையை உளநலத்தின் முக்கியத்துவமும் அதன் இன்றைய அவசியமும்   பற்றி  உதவி பிரதேச செயலாளர்  க.சதிசேகரன் நிகழ்த்தினார்.
 
அடுத்து “அனைவரினதும் உளநலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம்”   என்ற கருப்பொருள் உரையை செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் (உளவளத்துணை)  எஸ்.ஆப்தீன் நிகழ்த்தினார்.
 
நன்றி உரையை உளவளத்துணை உதவியாளர் எம்.ஐ.எஸ்.பஸ்மியா நிகழ்த்தினார். 
 
இந்த நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் மற்றும் சமுக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்  எம். தேவ முரளி  மற்றும் கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்த நிகழ்வினை நிர்வாக பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்  ஆ.சசிந்திரன்  தொகுத்து வழங்கினார்.

Related posts