மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக நுண்கடங்களைப் பெற்று செலுத்தமுடியாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியகட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி 3 இன்று தெரிவித்துள்ளார்
இது பற்றி மேலும் தெரிவிக்கையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பாமர மக்கள் தங்களின் தேவைக்காக பல நிறுவனங்களில் அதிகமான நுண்கடங்களை பெற்று வெலுத்தமுடியாமல் போகின்ற நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடியதன் பொருட்டு ஆரம்ப கட்டமாக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்தாக தெரிவித்துள்ளார்.1 தொடக்கம் இரண்டு இலட்சம் வரையான கடங்களை பெற்றவர்களுக்கு ஆரம்ப தொகையினை வெலுத்தி அவர்களை இந்த கடன் சுமைகளில் இருந்து விடுவிற்பதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திய பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிற்பதாக குறிப்பிட்டார்