சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஆரையம்பதி கோயில் குளத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மூதலாம் வருடத்தில் கல்வி கற்கும் இம்மாணவியின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் அத்தோடு ஐந்து பெண்பிள்ளைகளைக் கொண்டமைந்த குடும்பமாக இருப்பதனால் வறுமையின் காரணத்தினால் மாணவி தனது கல்வியைத் தொடரமுடியாத நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பிடம் உதவி கோரியதற்கு இணங்க அவ் அமைப்பு இம்மாணவியின் மூன்று வருட கல்வி நடவடிக்கைக்கு பெருந்தொகையான பணத்தினை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்கள் மாணவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று இப் பணத்தொகையினை வழங்கி வைத்துள்ளார்.
இந் நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவரும் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் உதவியினை வழங்கி வைக்க உதவிய சுவிஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் மாணவியின் தந்தை தம்பிஐயா நன்றி தெரிவித்துள்ளார்.