அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண கல்விச் சமூகத்தால் பெறப்பட்ட மூன்று இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய கோரிக்கை கடிதத்தையும் இணைத்து கிளிநொச்சியில் வைத்து கையளித்திருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சார்பில் ஜனாதிபதியின் சட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் லக்சுமி ஜெயவிக்கிரம ஒப்பமிட்டு 20 ஆம் திகதி மாகாண கல்வி அமைச்சுக்கு அந்தப் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் பல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இது விடயம் தொடர்பில் ஏற்கனவே உரிய கரிசனை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.