தமிழ் மக்கள் உள்ளிட்ட எந்த இனத்தவரும் புறக்கணிக்கப்படாமையே சிங்கப்பூர் அபிவிருத்தி அடைந்தமைக்கான முக்கிய காரணம் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போன்று அபிவிருத்தி அடைய வேண்டும் என சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய அங்கு சகல இன மக்களின் பங்களிப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அது தவிர அந்த நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாமையே நாடு முன்னேற்றமடைய காரணம் என்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் பல்வேறு அரசியல் தலையீடுகளாலும் ஊழல்களாலும் அபிவிருத்திகள் ஸ்தம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.