இரண்டு கோடியே 70இலட்சம் ரூபா நிதியில் கட்டி முடிக்கப்பட்ட மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயல புதிய கட்டிடத்திற்கான கட்டிடத்திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மந்திரி ரணில் விக்கிரமசிங்க,மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன,கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம,இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீரலி,அலிசாஹிர் மௌலானா,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்,அரசஊழியர்கள் கலந்துகொண்டார்கள். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதேசசெயலகத்தில் மரம் நாட்டிவைத்து தண்ணீர் ஊற்றினார்.புதிய கட்டிடத்தைஉத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.இதன்போது அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப்பை வழங்குவதையும்,வறுமைப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்களையும் பிரதமர் வழங்கிவைத்தார்.ஆரையம்பதி பிரதேச சபைச் தவிசாளர் வீ.மகேந்திரலிங்கம் அவர்கள் இனநல்லிணக்கத்தை பிரதேசத்தில் கட்டியெழுப்பும் நோக்கிலும்,சமத்துவமான ஆட்சியை கொண்டு செல்லும் நோக்கில் பிரதமருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.இதன்போது பிரதமர்,அமைச்சர்கள்,ஆளுநர் போன்றோர்கள் உரையாற்றினார்கள்.