வாகனம் வாங்க காத்திருப்போருக்கு இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா மகிழ்ச்சியான தகவலொன்றை வெளியிட்டுள்ளார்1000 ccஇற்கும் குறைந்த திறனுடைய வாகனங்களுக்கு அறவிடப்படும் மேலதிக வரியை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த மேலதிக வரியை விரைவில் விலக்கிக் கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்
1000 cc இற்கு குறைவான திறனுடைய அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைட்பிரிட் வாகனங்களுக்கு அறவிடப்படுகின்ற தயாரிப்பு வரியை அதிகரிக்க கடந்த 15ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது
அதற்கமைய என்ஜின் திறன் 1000 cc இற்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 1.5 மில்லியன் ரூபாவாகவும், ஹைட்பிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வரி 1.2 மில்லியன் ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டது
கடந்த காலப்பகுதியில் இலங்கையில் இந்த மோட்டார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்த நிலையிலேயே நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது