நாவிதன்வெளி பிரதேச சபையின் 06 வது சபை அமர்வு வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் சபா மண்டவத்தில் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
இன ஒற்றுமையை பேசும் அரசியல்வாதிகள் குடி நீர் வழங்கும் விடயத்தில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்
குடி நீரை காரணம் காட்டி சபையையும் கௌரவ உறுப்பினர்களையும் அவதூறான வார்தைகளால் விமர்சிக்கும் நிலைமையும் காணப்படுவதாகவும் மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கடந்த காலங்களில் பிரதேச சபையின் உழவு இயந்திரங்களையும் நீர்த்தாங்கிகளையும் பயன்படுத்தி குடிநீர்த்தேவை பெருமளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
கோடை காலங்களில் மழைவீழ்சியின்மையால் நிலத்தடி நீர் வற்றிப்போன காரணமாக நாவிதன்வெளி பிரதேச மக்கள் குடிநீருக்கு கஸ்ரப்படுகின்றனர். பெரும்பான்மையாக தமிழ் கிராமங்களே தொடர்ந்தும் பாராமுகமாக செயற்படும் அவலநிலைக்குள்ளது இவர்களின் இன்றியமையாத தேவையான குடி நீர் பிரச்சனைக்கு நீர்வழங்கல் திணைக்களமும் அது சார்ந்த அமைச்சும் மௌனமாக இருப்பது எதிர்வருகின்ற தேர்தலுக்காகவா என உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
மத்தியமுகாம் நீர்வழங்கல் திணைகழகத்தின் முகாமையாளரின் திடீர் மாற்றம் மேலும் குடிநீர் வழங்கும் செயற்பாட்டினை தாமதப் படுத்தும் காரணியாகவுள்ளதாகவும் புதிய அதிகாரி பிரதேசத்தின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காலதாமத்தை ஏற்படுத்தும் முன்பு கடமையாற்றிய முகாமையாளர் மீளவும் கொண்டுவருவதற்காக அவசர பிரேரணை மேலதிக ஒன்பது வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது இரண்டு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டது.
இதன்போது தவிசாளரின் விசேட அறிக்கைகள், குழு அறிக்கைகள் பிரேரணைகள் நடைமுறைபடுத்த வேண்டிய விடயங்கள் வரவு செலவு பற்றியும் ஆராயப்பட்டது.