ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளது என கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மாகாண சபை தேர்தலே அடுத்ததாக நடைபெறவுள்ளது. ஆகவே அதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு துரிதமாக நாம் தயாராக வேண்டும்.
உள்ளூராட்சி தேர்தலின் தோல்வியை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாம் மாற்றம் கண்டு வருகின்றோம்.
மேலும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கொடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி 2003 ஆம் ஆண்டை போன்று எதிரணியிடம் நாட்டை ஒப்படைக்கவா என சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் அதற்கு இம்முறை நாம் இடமளிக்கப் போவதில்லை“ என பிரதமர் தெரிவித்துள்ளார்.