சம்மாந்துறை வலயத்திலுள்ள பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 30 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என கோட்டக்கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து தெரிவித்தார்.
மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்ட வரலாற்றில் அதிகூடிய பெறுபேறு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் உச்சக்கட்டப் பெறுபேறாக 22பேர் சித்திபெற்றிருந்தனர்.
கோட்டக்கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து மேலும் கூறுகையில்:
நாவிதன்வெளிக்கோட்டத்தைச்சேர்ந்த சாளம்பைக்கேணி அஸ்.ஸிறாஜ் மகா வித்தியாலயம் -7 வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயம்-4 சொறிக்கல்முனை ஹொலிக்குறோஸ் மகா வித்தியாலயம் -5 கண்ணகி வித்தியாலயம் – 3 அல்ஹிறா வித்தியாலயம் -3 கலைமகள் வித்தியாலயம் -2 நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்-1 மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் வித்தியாலயம்-1 அல்தாஜூன் வித்தியாலயம்-1 அல்ஹிக்மா வித்தியாலயம் -1 அகத்தியர் வித்தியாலயம் -1 விவேகானந்த மகா வித்தியாலயம்-1 ஆகிய பாடசாலைகள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று இந்தபெறுபேற்றைப்பெற்றுள்ளன.
சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய புள்ளியான 188 புள்ளியை நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவி பெற்றுள்ளமை சாதனையாகக்கருதப்படுகின்றது. மாவட்டமட்டத்தில் இவரது புள்ளி 14வது இடத்திலுள்ளது. சம்மாந்துறை வலயத்தில் வடபுல எல்லையில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ளது இப்பாடசாலை.
இந்தப்பெறுபேறுகளுக்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.