கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியானது டிசெம்பர் 31 க்கு முன்னர் எந்தவொரு நிரந்தர தற்காலிக. இடமாற்றங்களும் இடம் பெறாதெனவும் கௌரவ ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகவும், 2018 ம்ஆண்டுக்கான ஆசிரியர்களின் இடமாற்றம் 2019 ஜனவரி 01 நடைமுறைக்கு வரும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமுமில்லை.
திடிரென ஊடகங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடைநிறுத்தம் என்ற செய்தியால் ஆசிரியர்கள் அஞசத்தேவையில்லை. எனினும் வழமையான வருடாந்த இடமாற்றத்துக்கான செயற்பாடுகள் நடைபெறும் எனவும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஜனாப். எம்.கே.எம். மன்சூர் அவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் க.நல்லதம்பி அவர்களிடம் தெரிவித்தார். இது தவிர வருடாந்த இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் அடுத்த வாரம் இடம்பெற உள்ளதாகவும் அதன்பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.