மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியக் கல்லூரி முன்பாக பாரிய கண்டனப் பேரணி வெள்ளிக்கிழமை(12.10.2018) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
காதல் பின்னணியால் கடந்த 8.10.2018 திகதியன்று தற்கொலை செய்துகொண்ட கட்டுறு பயிற்சி ஆசிரிய மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்றும்,கல்லூரி விடுதிப் பொறுப்பாளர்மீது பொய்யான வதந்திகளை உருவாக்கி தனியார் ஊடகங்களிலும்,இணையத்தளங்களிலும் போலியான செய்திகள் பரப்புரை செய்யப்பட்டு வெளியானது.
இவ்வாறான செயற்பாடுகளை கண்டித்தும்,கல்லூரிக்கும்,கல்லூரி மாணவர்களுக்கும் இனிமேலும் இவ்வாறான தவறுகள்,களங்கம் இடம்பெறக்கூடாது என்றும்,போலியான வதந்திகளை பரப்பும் ஊடகங்களுக்கும்,இணையத்தளங்களுக்கும் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவிப்பதோடு இனிமேல் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்துமாறும் கோரியே கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது.மட்டக்களப்பு தேசிய கல்வியக்கல்லூரிக்கு எதிராக முற்றிலும் பொய்யான செய்தியே தனியார் ஊடகங்களிலும்,இணையத்தளங்களிலும்,முகநூலிலும் பரப்புரை செய்யப்பட்டது.
இதன்போது சுமார் 400 மேற்பட்ட கல்வியல் கல்லூரி கட்டுறு பயிற்ச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.இதன்போது கலந்துகொண்டவர்கள் சுலோக அட்டைகளை தாங்கி நின்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.