இதற்குப்பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு பதிலளித்தார்.அதன் முழுவிபரம் பின்வருமாறு.
கேள்வி:-கிழக்கு மாகாணத்தில் தங்களின் அமைச்சின் நிதி எந்தளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?
கேள்வி:-இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரரீதியாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்:-இதனை ஐக்கிய தேசிய கட்சியுடன்தான் கேட்க வேண்டும்.
கேள்வி:-நீங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர் என்பதால் கூறமுடியுமா.?
பதில்:-நான் ஐக்கிய தேசியகட்சி அல்ல.ஆனால் ஐக்கிய தேசிய முன்ணணியில் இருக்கின்றேன்.உண்மையிலேயே காபந்து அரசாங்கம் எனும் சொல்லாடல் அடிக்கடி நாட்டில் உள்ள,வெளிநாட்டில் உள்ள அரசியல்வாதிகளினால் பேசப்படுகின்றது.காபந்து அரசு அரசாங்கம் அமைக்க உரிமை கிடையாது.மக்களின் ஆணையில்லை.காபந்து அரசு என்றாலே அது ஆபத்து என்று அர்த்தம் புலப்படும்.உண்மையிலே காபந்து எனும் நிலைப்பாட்டில்,வார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அமைச்சுப்பதவியை எடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் சரணாகதி அடைந்த கூட்டம் வட்டமாகும்.எஸ்.பீ.திசாநாயக்கா,
கேள்வி:-இன்று வரவு செலவு திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க கூடாது.உண்மையிலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைத்தற்கு பிற்பாடுதான் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனும் நிலைப்பாடு தமிழ்மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாகவும்,கருத்தாகவும் உள்ளது.இவ்விடயமாக உங்கள் கருத்தென்ன?
பதில்:-இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம்தான் கேட்கலாம்என்னிடம் கேட்பது பிரயோசனம் இல்லை.
கேள்வி:-தமிழ்மக்களின் அரசியல்தீர்வு தொடர்பில் உறுதியான முடிவை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று தமிழ்மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.இன்று இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் எடுப்பதில் உங்கள் பதில் என்ன?
பதில்:-தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல.என்னிடமும் அவ்வாறான எண்ணமும் உள்ளது.உறுதியான,நம்பிக்கையான தீர்வுகளை இன்றும் பேசித்தீர்க்கவில்லை.ஆனால் கடந்த காலங்களில் இனப்பதற்றம் இருந்தது.இனப்பிரச்சனை இல்லை.ஆனால் தற்போது இனப்பதற்றம் இல்லாமல்போய் அல்லது குறைவடைந்து விட்டது.ஆனால் இனப்பிரச்சனை உள்ளது.ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றாலும் குறிப்பாக சகோதர முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் அம்பாறையிலும்,கண்டியிலும்,தெல்
எனவே இனப்பதற்றம் இல்லாத சூழ்நிலையில் இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வு கிடைப்பதற்கு நாங்கள் ஐக்கியமாகவும்,சமாதானமாகவும் செயற்படவேண்டும்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் அரசியல்கட்சிக்கு அப்பால் சென்று தமிழ்மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்று கூடியுள்ளோம்.இதன்போது கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து “தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு” அல்லது தமிழ் காங்கிரஸ் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.பெருமளவானர்
கேள்வி:- நாட்டில் நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்மக்களுக்குரிய அரசியல்தீர்வு வருமா என்று எதிர்பார்க்கின்றீர்களா?
பதில்:- அதற்கு பதில் சொல்ல முடியாது.அரசியல்தீர்வு கொண்டு வரும் வாய்ப்பு புதிய அரசியலமைப்பு விடயத்தில்தான் தங்கியுள்ளது.அரசியல்தீர்வு விடயத்தில் கடைசி ஒரு வருடங்களுக்குள்ளேயே நடைமுறையாகுமா? எனும் சந்தேகத்தில்தான் நானும் உள்ளேன்.அரசியல் தீர்வு விடயத்தில் நானும் பலமுறை கதைத்துள்ளேன்.உண்மையிலேயே அரசியல்தீர்வு வரும் நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.அரசியல்தீர்வு வரவேண்டும். தீர்வையும் எடுத்துக்கொண்டு புதிய அரசியலமைப்பும் வரவேண்டும்.ஆனால் சில காரியங்கள் புதிய அரசாங்கம் வந்தவுடனே செய்திருக்கவேண்டும்.அதனை முதல் வருடத்தில் செய்திருக்க வேண்டும்.முதலாவது,இரண்டாவது,மூ
கேள்வி:-அரசியல்கைதி தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- அரசியல்கைதி தொடர்பாக நாங்கள் தீர்வு நிலைப்பாட்டில் நகர்ந்து செல்வதற்காக எனது உள்ளுணர்வு செல்கின்றது.நாடு முழுவதும் கொந்தளிப்புக்கள்,அசாம்பாவிதங்க
அரசாங்கம் என்பது பல கட்சிகளின் கூட்டாகும்.நாங்கள் சொல்வதையெல்லாம் அரசாங்கம் செய்யாது.ஏனைய கட்சிகளின் முடிவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்கு முடிவுகள் வேண்டும்.அரசாங்கம் பொதுநிலைப்பாட்டில் வந்தால்தான் செய்யும்.பொதுநிலைப்பாடு அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை.சமீபத்தில் சம்பிக்க ரணவக்க அரசியல்கைதி விடயத்தில் ஒரு பொதுவான யோசனையை முன்வைத்தார்.தமிழ் அரசியல்கைதிகளுக்கும்,படையினருக்
கேள்வி:-வடகிழக்கில் தங்களின் அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு அரசியல் தலையீடு காரணமாக தாமதிக்கப்படுகின்றதா என நீங்க நினைக்கின்றீர்களா?
பதில்:-இல்லை இல்லை அப்படியில்லை.வடக்கு கிழக்கிலே குறிப்பாக வடக்கிலே இருக்கின்றது.வடக்கிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சில முரண்பாடுகள் இருக்கின்றது.குறிப்பாக பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் மதிப்பிடு அறிக்கை கிடைக்காமல் வேலைகள் முடிவுறாமல் உள்ளது.ஒதுக்கப்பட்ட நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அந்தநிலையை மாற்றி புதிய திட்டங்களை வகுத்து அதனை முன்னெடுப்பதற்கு வேறு பிரதேச சபைகளுக்கு பணித்துள்ளேன்.இது என்னுடைய முரண்பாடு அல்ல.அது உள்வீட்டு பிரச்சனையாகும்.
கேள்வி:-கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் உங்கள் கட்சி போட்டியிடுவதாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கருத்து நிலவுகின்றது.இது உண்மையா?
பதில்:-வடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுவது பற்றி நாங்கள் இதுவரையும் எடுக்கவில்லை.மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு இருந்தால் வரும்போது பார்த்துக்கொள்வோம்.நீண்ட வீதியிலே பாதையிலே பயணிக்கின்றோம்.இன்னும் இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் நதி ஒன்று குறுக்காக பயணிக்கவுள்ளது என எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.அறியப்பட்டுள்
கேள்வி:-மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரதேச செயலகங்களுக்கு மட்டும் தங்களின் அமைச்சின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:-தட்டுங்கள் திறக்கப்படும்.கேளுங்கள் தரப்படும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தெந்த பிரதேச செயலங்களில் இருந்து தட்டப்படுகின்றதோ அல்லது கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றதோ அவற்றுக்கெல்லாம் கொடுத்துள்ளேன்.நான் என்ன மந்திரவாதியா எங்கெல்லாம் பிரச்சனை இருக்கின்றது என்பதை அறிவதற்கு.கேட்டால்தான் தெரியும்.என்னை நாடினால்தான் தருவேன்.எந்தெந்த பிரதேச செயலங்களில் பிரச்சனை இருக்கின்றது? நிதி தேவையென்று அரசியல்வாதிகளிடம்,அரசியல் தலைவர்களிடம் சொல்லுங்கள்.கேட்கச் சொல்லுங்க கேட்டால் தருவேன்.
கேள்வி:- தங்களின் நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள், பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.இதுபற்றி என்ன சொல்லுகின்றீர்கள்?
பதில்:-எரிபொருள் சூத்திரம் நிதி அமைச்சருக்கே புரியவில்லை.நானும் ஊடகங்களின் மூலம் அறிந்துகொண்டேன்.நிதி அமைச்சருக்கே புரியவில்லை.எனக்கு எப்படி புரியும்.