விவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்

விவசாய கல்லூரிகளுக்கு, 2019 / 2020ஆம் ஆண்டுக்கான ஆங்கிலமொழி மூல விவசாய உற்பத்தி தொழில்நுட்பக் கல்வியை பயில்வதற்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் அறிவித்துள்ளார்.
விவசாய திணைக்களத்தினால், நடாத்தப்படும் விவசாய உற்பத்தி தொழில் நுட்பத்தில் ஒன்றரை வருட தேசிய தொழில்சார் தகமை மட்டம் 05 பாடநெறிக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சதாரணதர பரீட்சையில் தமிழ்மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய மூன்று படங்களில் திறமைச் சித்தியுடன் 04 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து கல்விப் பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப்பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாமென அவர் தெரிவித்தார்.
03ஆம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால், வழங்கப்படும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய, தொழில்சார் தகமை மட்டம் 04 சான்றிதழை பெற்றக் கொண்ட பயிலுனர்களும், ஆண், பெண் இரு பாலாரும் இதற்கு விண்ணப்பிக்கலாமெனவும் 17வயதுக்கு குறையாமலும், 25வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டுமெனவும் தெரிவித்தார்.
விண்ணப்பத்தினை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் பணிப்பாளர், விரிவாக்க மற்றும் பயிற்சி நிலையம், விவசாயத் திணைக்களம், பேராதனை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts