மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பௌத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,அரச உத்தியோகஸ்தர்கள் மட்டக்களப்பில் சுதந்திரமாக கடமையாற்றுவதற்கும்,குறித்த மதகுருவுக்கு நல்லாட்சி அரசாங்கமும்,சட்ட ஒழுங்கு அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை நிருவாகசேவைச் சங்கத்தின் மட்டக்களப்பு நிருவாக உத்தியோகஸ்தர்களினால் ஆட்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் ஆட்பாட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னாள் வியாழக்கிழமை(25.10.2018) காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது.”அரச நிருவாக அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல்களைவன்மையாக கண்டிக்கின்றோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்,பிரதி ஆணையாளர்கள்,மாவட்டத்தில் உள்ள கிராமசேவையாளர்கள் உட்பட பலர் கவனயீர்ப்பு ஆட்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பையும்,பிரச்சனையும் தெரிவித்தார்கள்.
இச்சம்பவமானது கடந்த செவ்வாய்க்கிழமை(23) மட்டக்களப்பு மைலம்பாவெளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.மயிலம்பாவெ
இதன்போது அவ்விடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களை அங்கு நின்ற மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் பிரதேச செயலாளரை மிக மோசமான தகாத வார்த்தைகளால் ஏசியதுடன் அவரை கன்னத்தில் அரைய முற்பட்டதுடன் அவரது சேட்டை பிடித்து அடிக்க முற்பட்ட போது அதனை அவ்விடத்தில் நின்ற பொலீசார் தடுத்துள்ளனர்.
இந்த கவயீர்ப்பு ஆட்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “மதகுருவே புத்தபெருமானின் போதனை வன்முறை…?” “மதகுருவே அரச ஊழியர்களை துன்புறுத்தாதே”,”மட்டக்களப்பி
இவ்விடயமாக மட்டக்களப்பு நிருவாகசேவை சங்கத்தினர் ஒன்றிணைந்து பிரச்சனையை எழுதியும்,கையொப்பமிட்ட கடிதத்தினை ஜனாதிபதி, பிரதமருக்கு கையளிக்குமாறு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.