நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் காரியாலயத்தில் இடம்பெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தன்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு இல்லை என்றும் நானே இந்த நாட்டின் பிரதமர் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதிவியேற்றிருந்தார். இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.