‘பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள்’

“நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று கூட்டப்பட்டு, அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது என்று தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, நிலையியற் கட்டளைகளை கைவிட்டு, நிலை​யான அரசாங்கத்தை ​அமைப்பதற்கான இயலுமை தொடர்பில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு
வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 14 ஆம் திகதிக்கான, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்தி​ரம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக, கட்சி பிரதிநிதிகளுடனான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று, சபாநாயகர் அலுவலகத்தில்  இடம்பெற்றது.

அந்த சந்திப்பு தொடர்பில் சபாநாயகர் ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால், ஜனாதிபதியை அழைக்கும் கட்டளையை சபைக்கு அறிவித்து அதன்பின்னர், அன்றைய நாளுக்குரிய நடவடிக்கைகளை நிறைவுச் செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல் என்பதே, அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணம், அதற்கு எதிரானதாகவே இருந்தது. அன்றைய தினத்துக்கான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, நிலையான அரசாங்கத்தின் பெரும்பான்மையை, நாடாளுமன்றத்தில் கோரவேண்டும் என்பதே அவர்களின் கருத்தாகும்.

இரு தரப்பினரதும் கருத்துகளையும் செவிமடுத்த சபாநாயகர், தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில், “ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 116 பேரினால், இதற்கு முன்னர் எழுத்துமூலமாக வழங்கப்பட்ட, நாடாளுமன்ற பெரும்பான்மையின் எண்ணத்தின் அடிப்படையில், செயற்பட்டு, அன்றையதினம் சாதாரண நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நிலையியற்கட்டளைகளை கைவிட்டு, நிலை​யான அரசாங்கத்தை ​அமைப்பதற்கான இயலுமை தொடர்பில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு
வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு முதலீட்டு துறைகள் மட்டுமன்றி பங்குச்சந்தையும் சரிந்துள்ளது. அதேபோல, மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ளமுடியாத அழுத்தங்களை விரைவாக சமாதானப்படுத்தி, இலங்கை தொடர்பிலான நம்பிக்கையை அதனூடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் சபாநாயகர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts