9 மாகாண சபைகள் மற்றும் 6 மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலஎல்லை நிறைவடைந்துள்ளதனால் விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.மாகாண சபை உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக தற்பொழுது நடைமுறைபடுத்தப்படும் 2017ம் ஆண்டு இல 17 கீழான மாகாண சபை தேர்தல் (திருத்தம்) சட்டத்தில் திருத்தப்பட்ட 1988 இலக்க 2இன் கீழான மாகாணசபை சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ நடைமுறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்காளர் தொகுதி நிர்ணய பணிகள் இதுவரை நிறைவடையவில்லை.
இதற்கமைவாக எதிர்வரும் மாகாண சபை தேர்தல் துரிதமாக நடத்தப்படவேண்டிய தேவையை கருத்திற்கொண்டு இம்முறை நடத்தப்படுவதற்கு தேர்தலுக்கு மாத்திரம் மாகாண சபை தொகுதி முன்னர் இருந்த விகிதாசார பிரதிநிதித்துவமுறையின் கீழ் 25 சதவீதம் அவசியம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான திருத்தசட்டத்தை மேற்கொள்வதற்கு மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.